வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புவியியல் குறியீடு பெற்ற மிஹிதானா என்ற இனிப்பு பண்டம் மேற்கு வங்கத்தில் இருந்து பஹ்ரைனுக்கு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது
Posted On:
05 OCT 2021 1:37PM by PIB Chennai
உள்நாட்டு மற்றும் புவியியல் குறியீடு பெற்ற தயாரிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியாக, மேற்கு வங்கத்தின் பர்தாமனில் இருந்து மிஹிதானா என்ற புவியியல் குறியீடு பெற்ற இனிப்பு பண்டம் பஹ்ரைனுக்கு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது.
தனித்துவமான இனிப்பு வகையான மிஹிதானா, அபேடா பதிவு பெற்ற டி எம் எண்டர்பிரைசஸ், கொல்கத்தா எனும் நிறுவனத்தால் பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பஹ்ரைனின் அல்ஜசிரா குழுமத்தால் இறக்குமதி செய்யப்பட்டது.
பஹ்ரைனில் உள்ள அல்ஜசிரா சூப்பர் ஸ்டோர்களில் நுகர்வோருக்காக இந்த இனிப்பு உணவு காட்சிப்படுத்தப்படுகிறது (சுவைப்பதற்கும் வழங்கப்படுகிறது). வரவிருக்கும் தீபாவளி பண்டிகையின் போது இந்த தனித்துவமான இனிப்பு உணவு அதிகளவில் பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761053
---
(Release ID: 1761121)