வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இறக்குமதியை குறைக்கும் முயற்சி: காஷ்மீரிலிருந்து 2,000 கிலோ வால்நட் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது
Posted On:
04 OCT 2021 12:25PM by PIB Chennai
இறக்குமதியை குறைக்கும் முயற்சியாக, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு(ஓடிஓபி) திட்டத்தின் கீழ் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு 2,000 கிலோ வால்நட் அனுப்பி வைக்கப்பட்டது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இறக்குமதிகளை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வால்நட் இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் வால்நட் உற்பத்தியில் 90 சதவீதம் காஷ்மீரில் நடைபெறுகிறது. ஓடிஓபி திட்டத்தின் கீழ் காஷ்மீரில் உற்பத்தியாகும் வால்நட்-ஐ பிற இடங்களுக்கு அனுப்பும் முயற்சியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டது.
இதையடுத்து காஷ்மீரில் புத்காம் மாவட்டத்திலிருந்து, 2000 கிலோ வால்நட் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது முதல் தரமானது, சுவை மற்றும் ஊட்டச்சத்து மிக்கது. உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தையில் வால்நட்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 2000 கிலோ வால்நட் ஏற்றப்பட்ட வேனை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத்துறையின் கூடுதல் செயலாளர் திருமிகு சுமிதா தாவ்ரா கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீர் வரத்தக வளர்ச்சி அமைப்புடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க, இந்தியாவில் வால்நட் இறக்குமதி செய்பவர்களை ஒடிஓபி குழுவினர் தொடர்பு கொண்டு, காஷ்மீரிலிருந்து வால்நட் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தற்போது பெங்களூருக்கு 2000 கிலோ வால்நட் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு முன்பு பெங்களூரில் உள்ள இறக்குமதியாளர்கள், அமெரிக்காவில் இருந்த வால்நட்-ஐ இறக்குமதி செய்தனர் என்பது குறிப்பி்டத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760721
********
(Release ID: 1760721)
(Release ID: 1760760)
Visitor Counter : 245