ஜல்சக்தி அமைச்சகம்
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக 2021 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை ‘ஸ்வச்சதா ஹை சேவா’ நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது
Posted On:
02 OCT 2021 7:43PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ் நாட்டின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தையும், அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் வெற்றி வரலாற்றையும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் (அகம்) எனும் சமூக பங்களிப்பு முன்முயற்சியின் மூலம் இந்திய அரசு கொண்டாடி வருகிறது.
அகம் பிராச்சாரத்தின் ஒரு பகுதியாக, திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத கிராமங்களின் சாதனையை கொண்டாடும் வகையிலும், இதை ஊக்குவிக்கும் வகையிலும், தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புறம் பகுதி 2-ன் கீழ் முக்கிய செயல்பாடுகளை ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது.
சத்யாகிரக தூய்மை ரத யாத்திரை 2021 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரையிலும், தூய்மையின் சேவை (ஸ்வச்சதா ஹை சேவா) 2021 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரையிலும், தூய்மை கூட்டங்கள் 2021 ஆகஸ்ட் 15 முதல் 2022 ஆகஸ்ட் 15 வரையிலும், ‘ஸ்தாவித்வா எவும் சுஜலாம் அபியான்’ எனும் 100 நாள் பிரச்சாரம் 2021 ஆகஸ்ட் 25 முதலும் நடைபெற்று வருகின்றன.
தூய்மையின் சேவை பிரச்சாரம் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் ஒன்று திரட்டி, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லா முழுவதும் தூய்மையான கிராமப்புற இந்தியாவை உருவாக்கும் மக்கள் இயக்கத்திற்கு வலுவூட்டப்பட்டுள்ளது.
தூய்மையின் சேவை 2021 திரைப்படம்: https://www.youtube.com/watch?v=dOn3MQ2mJFU
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1760427
*****************
(Release ID: 1760459)