நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நெல் கொள்முதல் நாளை முதல் தொடக்கம்

Posted On: 02 OCT 2021 7:33PM by PIB Chennai

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 2021-22ம் ஆண்டு காரீப் சந்தை பருவத்துக்கான நெல் கொள்முதலை, நாளை முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா  விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் ஒட்டு மொத்த நலனை கருத்தில் கொண்டும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான நுகர்வோருக்கு  தரமான கொள்முதலை உறுதி செய்யவும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத்துறை நம்புகிறது.

*****************

 


(Release ID: 1760443)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi