கலாசாரத்துறை அமைச்சகம்
நாட்டின் கலாச்சார பெருமை மற்றும் நம்பிக்கையின் அடையாளம் கங்கை என பிரதமர் அடிக்கடி கூறியுள்ளார்: மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி
Posted On:
02 OCT 2021 6:43PM by PIB Chennai
பிரதமர் பரிசாக பெற்ற பொருட்களின் ஏலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பார்வையிட, புதுதில்லியில் உள்ள நவீன கலை தேசிய கூடத்துக்கு மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று சென்றார்.
மகாத்மா காந்தியின் 152வது பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில், மகாத்மா காந்திக்கு மத்திய அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நினைவு பரிசாக அளிக்கப்பட்ட பொருட்களின், 3வது சுற்று மின்னணு ஏலம் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை https://pmmementos.gov.in என்ற இணையளத்தில் நடக்கிறது.
இது குறித்து நவீன கலை தேசிய கூடத்தில் மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி பேசியதாவது:
தான் பெற்ற பரிசு பொருட்களை ஏலத்தில் விட முடிவு செய்த முதல் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி. இந்த ஏலம் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நமாமி கங்கை திட்டம் என்ற உயர்ந்த நோக்கத்துக்கு செல்கிறது. கங்கை நதியை நாட்டின் கலாச்சார பெருமை மற்றும் நம்பிக்கையின் அடையாளம் என பிரதமர் அடிக்கடி கூறுவார்.
1348 நினைவுப் பரிசுகள் இந்தாண்டு ஏலம் விடப்படுகின்றன. இதில் டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள் அளித்த பரிசுகளும் அடங்கியுள்ளன. அக்டோபர் 1ம் தேதி வரை 1081 நினைவுப் பரிசுகள் ஏலங்களை பெற்றுள்ளன. இவைகள், புது தில்லியில் உள்ள நவீன கலை தேசிய கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760403
*****************
(Release ID: 1760438)
Visitor Counter : 194