ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: 50,000 மகளிர் சுய உதவிக் குழுவினர் வர்த்தக தொடர்பாளர்களாக அர்ப்பணிப்பு

प्रविष्टि तिथि: 01 OCT 2021 3:21PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாட, கடந்த மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை  50,000 மகளிர் சுய உதவிக் குழுவினரை, வர்த்தக தொடர்பாளர்களாக, தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (DAY-NRLM ) அர்ப்பணித்தது.   இந்த வர்த்தக தொடர்பாளர்கள், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் வீடு வீடாக சென்று, சேவைகளை வழங்குவர். இந்த நடவடிக்கைக்கு, ‘ஒரு கிராம பஞ்சாயத்து, ஒரு வரத்தக தொடர்பாளர்திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. 

2023-24ம் ஆண்டு இறுதிக்குள், ஊரக பகுதிகளில் குறைந்தது ஒரு வர்த்தக தொடர்பாளரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்காக 50,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வர்த்தக தொடர்பாளர் என  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஊரக பகுதிகளில் ஏற்கனவே சேவைகளை வழங்கி வருகின்றனர். 

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஒரு வார பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி  மும்பையில் உள்ள இந்திய வங்கி மற்றும் நிதி கழகம் (IIBF), நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற வேண்டும். 

ஊரக பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினரில் 96 சதவீதம் பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவரை, 54,000க்கு மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் இந்த தேர்வை முடித்து வர்த்தக தொடர்பாளர்கள் என ஐஐபிஎப் சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்த பயிற்சிக்கான செலவை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுள்ளது.

ஊரக பகுதிகளில் அடிப்படை வங்கி வசதிகளை வழங்குவதற்கு, மகளிர் சுய உதவிக் குழுவினரை டிஜிபே சக்தி’-யாக ஈடுபடுத்த மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும்  சிஎஸ்சி - இந்திய மின்னணு  நிர்வாக நிறுவனத்துடன், தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (DAY-NRLM ) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759946

*****************


(रिलीज़ आईडी: 1760101) आगंतुक पटल : 391
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi , Punjabi , Telugu