தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேர்தல் மற்றும் ஜனநாயகம் பற்றிய இந்திய தேர்தல் ஆணையத்தின் வருடாந்திர தேசிய கட்டுரை போட்டி: இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி வைத்தது

Posted On: 01 OCT 2021 1:38PM by PIB Chennai

தேர்தல் மற்றும் ஜனநாயகம் பற்றிய இந்திய தேர்தல் ஆணையத்தின் வருடாந்திர தேசிய கட்டுரை போட்டியை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று தொடங்கி வைத்தது. இந்த கட்டுரை போட்டியை ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை கழகம் (IIIDEM)  மற்றும் ஜிந்தால் குளோபல் சட்டப் பள்ளி (JGLS), ஹரியானா சோனிபட்டில்  உள்ள ஓ.பி.ஜிந்தால் குளோபல் சட்டப் பள்ளி ஆகியவை இணைந்து நடத்துகிறது.

இந்தப் போட்டி நாளை (அக்டோபர் 2ம் தேதி) ஆன்லைனில் தொடங்குகிறது. கட்டுரைகளை சமர்ப்பிக்க  2021 நவம்பர் 21ம் தேதி கடைசி நாள். இந்த கட்டுரை போட்டிக்கான 2 தலைப்புகள் - தலைப்பு 1: தேர்தலின் போது சமூக ஊடக ஒழுங்குமுறைகளுக்கான சட்ட அமைப்பு, தலைப்பு 2: தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் பங்கு. இந்த கட்டுரை போட்டியின் முக்கிய நோக்கம்சமகால ஆராய்ச்சியில் ஈடுபட சட்ட மாணவர்களை ஊக்குவிப்பதும், இந்தியாவில் தேர்தலை நிர்வகிக்கும் சட்டத்தின் புதிய பரிமாணங்களை ஆராய்வதும் ஆகும்.

இந்த கட்டுரை போட்டி ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இந்திய சட்ட பல்கலைக்கழகங்கள்/ மையங்கள் / இந்திய பார் கவுன்சில் அங்கீகரித்த கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்காக இந்த கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.  இந்த கட்டுரை பிரிவுகளுக்கான பரிசுகள், முதல் பரிசு ரூ.1 லட்சத்துடன் ஈர்க்கும் வகையில் உள்ளன.

தேசிய கட்டுரை போட்டியின் முழு விவரங்கள் https://www.eciessay.org/ என்ற இணையதளத்தில் உள்ளன. இவற்றில்  நாளை முதல் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759917

*****************


(Release ID: 1760081) Visitor Counter : 547