தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐரோப்பாவில் அகில இந்திய வானொலியின் ராகம் சேனல் பிரபலம்
प्रविष्टि तिथि:
01 OCT 2021 1:33PM by PIB Chennai
நியூஸ் ஆன் ஏர் செயலியில், அகில இந்திய வானொலியின் உலகளாவிய ஒலிபரப்பில், ஏஐஆர் தமிழ், ஏஐஆர் நியூஸ் மற்றும் ஏஐஆர் நியூஸ் 24x7 ஆகியவை முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளன. ஏஐஆர் சென்னை ரெயின்போ 8வது இடத்துக்கு சென்றுள்ளது.
அகில இந்திய வானொலியின் நேரடி ஒலிபரப்புகள் பிரபலமாக உள்ள நாடுகளின் தரவரிசை பட்டியலில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஃபிஜி மற்றும் கனடா ஆகியவை தொடர்ந்து 12 வாரங்களாக முதல் 5 இடத்தில் உள்ளன.
அகில இந்திய வானொலியின் இசை சேனலான ஏஐஆர் ராகம் ஜெர்மனி, பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில், சுமார் 8000 நகரங்களில் வசிக்கும் மக்கள் நியூஸ் ஆன் ஏர் செயலியின் வாயிலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகின்றனர்.
நியூஸ் ஆன் ஏர் செயலியின் ரேடியோ ஒலிபரப்பில் பிரபலமாக உள்ள நகரங்களின், நிகழ்ச்சிகள், சேனல்களின் தரவரிசை பட்டியலை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்.
செப்டம்பர் 16ம் தேதி முதல் 29 தேதி வரை பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில், இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759915
*****************
(रिलीज़ आईडी: 1759977)
आगंतुक पटल : 358