நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021-22 நிதியாண்டில் ஆகஸ்ட் 2021 வரையிலான மத்திய அரசின் கணக்குகளின் மாதாந்திர ஆய்வு

प्रविष्टि तिथि: 30 SEP 2021 4:49PM by PIB Chennai

2021 ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

ஆகஸ்ட் 2021 வரை ரூ. 8,08,672 கோடியை (மொத்த ரசீதுகளில் தொடர்புடைய 2021-22 பட்ஜெட் மதிப்பீட்டில் 40.9%) இந்திய அரசு பெற்றுள்ளது.. இதில், ரூ. 6,44,843 கோடி வரி வருவாய் (நிகரத்திலிருந்து மையம்), ரூ. 1,48,650 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ரூ. 15,179 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகள் ஆகும்.

கடன்களை மீட்டெடுப்பதற்கான ரூ. 6,808 கோடி மற்றும் இதர மூலதன ரசீதுகள் ரூ. 8,371 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகளில் அடங்கும். ஆகஸ்ட் 2021 வரை இந்திய அரசால் ரூ 2,12,606 கோடி மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் செய்யப்பட்ட மொத்த செலவு ரூ. 12,76,681 கோடி (தொடர்புடைய பட்ஜெட் மதிப்பீடு 2021-22-ன் 36.7%) ஆகும். இதில் ரூ. வருவாய் கணக்கில் ரூ 11,04,813 கோடி மற்றும் மூலதனக் கணக்கில் ரூ 1,71,868 கோடி அடங்கும். மொத்த வருவாய் செலவில், ரூ. 2,78,371 கோடி வட்டி செலுத்துதல் மற்றும் முக்கிய மானியங்களின் கணக்கில் ரூ 1,47,398 கோடி அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759660

*****************


(रिलीज़ आईडी: 1759778) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu