பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

89-வது விமானப்படை தினம்: கண்கவர் விமான சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

प्रविष्टि तिथि: 29 SEP 2021 3:08PM by PIB Chennai

இந்திய விமானப்படை, தனது 89-வது ஆண்டு விழாவை அக்டோபர் 8-ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. காசியாபாத்தில் உள்ள ஹிந்தன் விமானப்படை தளத்தில் நடைபெறும் விமானப்படை தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பல்வேறு விமானங்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்வு முக்கிய அம்சமாக இருக்கும். இதற்கான ஒத்திகை அக்டோபர் 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கும்.

வாசிர்பூர் பாலம்- கர்வால்நகர்அஃப்ஜல்பூர்- ஹிந்தன், ஷாம்லி- ஜிவானா- சாந்திநகர்- ஹிந்தன், ஹாப்பூர்- பில்குவா- காசியாபாத்- ஹிந்தன் ஆகிய பகுதிகளில் விமானங்கள் தாழ்வாகப் பறக்கும்.

காலை 8 மணிக்கு, பிரசித்தி பெற்ற ஆகாஷ் கங்கா குழுவைச் சேர்ந்த வீரர்கள்ஏஎன்-32 ரக விமானத்திலிருந்து தங்களது வண்ணமயமான விதானங்கள் மூலம் கொடியுடன் வானில் குதிப்பார்கள்.

பாரம்பரிய விமானம், நவீன போக்குவரத்து விமானம் மற்றும் போர் விமானம் ஆகியவை விமான அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும். கண்கவர் விமான சாகச நிகழ்வுகளுடன் இந்த விழா காலை 10.52 மணிக்கு நிறைவடையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759239

                                                                                                                  -----

 


(रिलीज़ आईडी: 1759297) आगंतुक पटल : 327
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Punjabi , Bengali , Urdu