கலாசாரத்துறை அமைச்சகம்

வெற்றியை பழக்கமாகக் கொண்டுள்ளார் பி.வி.சிந்து

Posted On: 29 SEP 2021 11:09AM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-2020 போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்த இந்தியாவின் புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவின் பெயர் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்த பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் தனது ஆட்டத்தினால் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த சிந்து, இந்தியாவிற்குத் திரும்பியதும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தமது பூப்பந்து மட்டையை பரிசாக அளித்தார். பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகளின் மின்னணு ஏலம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்த அன்பளிப்புகளுள் சிந்துவின் பூப்பந்து மட்டையும் இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய மின்னணு ஏலம், அக்டோபர் 7 வரை நடைபெறும். www.pmmementos.gov.in என்ற இணையதளத்தில் நடைபெறும் ஏலத்தில் நீங்களும் கலந்து கொள்ளலாம். சிந்துவின் பூப்பந்து மட்டையின் அடிப்படை விலை ரூ. 80 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759157

*******

(Release ID: 1759157)(Release ID: 1759225) Visitor Counter : 248