உள்துறை அமைச்சகம்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 17வது நிறுவன தினக் கொண்டாட்டம்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா பங்கேற்பு

Posted On: 28 SEP 2021 7:05PM by PIB Chennai

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) 17ஆவது நிறுவன தினம் புதுதில்லியில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிறுவன தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள், ‘‘இமயமலைப் பகுதியில் பேரிடர் சம்பவங்களின் பாதிப்பைத் தடுத்து நிறுத்துவதுஎன்பதாகும். இந்த நிகழ்ச்சியில் ஆப்தா மித்ரா (உங்கள் நண்பர்கள்) திட்டத்தின் பயிற்சி கையேட்டை திரு. அமித்ஷா வெளியிட்டார். மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த ராய் உட்பட பலர் காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திரு. அமித்ஷா பேசியதாவது:

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை கடந்த 17 ஆண்டுகளில் நாட்டில் பேரிடர் மேலாண்மையின் வரலாற்றை மாற்றியுள்ளன.

பேரிடர் அபாயங்களை குறைப்பதற்காக உலகம் முழுவதும் பின்பற்றப்படும் சிறந்த முறைகளை ஆராய வேண்டும். சூழலுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும், பேரிடர் மீட்புக் குழுவினர், பேரிடர் நடக்கும் இடங்களுக்கு உடனடியாக செல்ல தாமதம் ஏற்படுகிறதுஇது போன்ற நேரங்களில் பயிற்சி பெற்ற உள்ளூர் நண்பர்களை ஈடுபடுத்துவது சிறந்த யோசனையாக இருக்கும். ஆப்தா மித்ரா  திட்டம் மூலம், பொதுமக்களை, பேரிடர் மீட்பு நடவடிக்கைக்குத் தயார்படுத்த முடியும். ஆப்தா மித்ரா திட்டம் மிக முக்கியமானது.   பரிசோதனை அடிப்படையில் ஆப்தா மித்ரா திட்டம், 25 மாநிலங்களில் உள்ள வெள்ள பாதிப்பு ஏற்படும்  30 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதுவெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க 5,500 பேரை தயார்படுத்துவதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளன. நீச்சல் தெரிந்தவர்கள் இதற்குத் தேர்வு செய்யப்படுகின்றனர்.

வெள்ள பாதிப்பு ஏற்படும் 350 மாவட்டங்களில், ஆப்தா மித்ரா திட்டத்தை அரசு அமல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்கு 28 மாநிலங்கள், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன

நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளிலும், பேரிடர் மேலாண்மைக் கல்வியை இந்தியா அறிமுகம் செய்துள்ளதுபள்ளிக் குழந்தைகளிடம் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி வளர்க்கப்பட்டால்அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவியாக இருப்பர்.

நாட்டில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கங்கள் பேரிடரால் பாதிக்கும் பகுதிகளாக உள்ளன. நாட்டின் 58 சதவீத நிலப்பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக உள்ளன. 12 சதவீத பகுதிகள் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக உள்ளன. கடலோரத்தில் 7,516 கி.மீ தூரம் புயல் பாதிக்கக்கூடிய பகுதிகளாக உள்ளன. 68 சதவீத நிலப்பகுதி வறட்சியால் பாதிப்படையக் கூடிய பகுதிகளாக உள்ளன. இதனால் நமது நாட்டில் பேரிடர்  மேலாண்மைக் குழுவுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். நமது பயணம் இன்னும் முடியவில்லை. நாம் இன்னும் வேகமாக இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு திரு அமித்ஷா பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759022

-------

 



(Release ID: 1759071) Visitor Counter : 1751