அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புது நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் மூலம் தொலை மருத்துவம், செயற்கை நுண்ணறிவியல், மின்னணு சுகாதாரம், பெருந்தரவு ஆகியவற்றில் 75 கண்டுபிடிப்புகளை அடையாளம் காண "ஜன் கேர்" என்ற தலைப்பில் "அம்ரித் மாபெரும் சவால் திட்டத்தை" மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 28 SEP 2021 3:31PM by PIB Chennai

புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மற்றும் தொழில் முனைவோர் மூலம் தொலைமருத்துவம், செயற்கை நுண்ணறிவியல், மின்னணு சுகாதாரம்பெருந்தரவு, பிளாக்செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் 75 கண்டுபிடிப்புகளை அடையாளம் காண்பதற்காக "ஜன் கேர்" என்ற தலைப்பில் "அம்ரித் மாபெரும் சவால் திட்டத்தை" மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார்.

பிரதமரால் தொடங்கப்பட்ட விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை ஒட்டி இந்த மாபெரும் சவால் நடைபெறுவதால், இந்தியாவின் சுகாதாரத்துறை சவால்களுக்கான புதுமையான தீர்வுகளை இளம் நிறுவனங்களும், தொழில்முனைவோரும் உருவாக்குவது முக்கியத்துவம் பெறுகிறது என்று அமைச்சர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்படும் 75 சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடுத்த 25 வருடங்களில் 100-ஆவது சுதந்திரதினத்தை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் சொத்தாகத் திகழும் என்று அமைச்சர் கூறினார்.

புதுதில்லியில் நடைபெற்றவிக்யான் சே விகாஷ்எனும் தலைப்பிலான பிராக்கின் 10-ஆவது உயிரி தொழில்நுட்பப் புதுமையாளர்கள் கூட்டத்தில் பேசிய டாக்டர்.ஜிதேந்திர சிங், சிந்தனையில் இருந்து செயலாக்கம் வரை அனைத்து ஆதரவும் புது நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758926

-----

 

 (Release ID: 1759024) Visitor Counter : 49