வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நகர்ப்புற சுய உதவிக் குழுவினரின் சிறிய உணவு பதப்படுத்தும் ஆலைகளுக்கு உதவ இரு திட்டங்கள் ஒருங்கிணைப்பு

Posted On: 27 SEP 2021 6:01PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமரின் சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய நகர்ப்பற வாழ்வாதார திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் நடத்தியது.

இந்த ஒருங்கிணைப்பு திட்டத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சக செயலாளர் திருமதி புஷ்பா சுப்ரமணியத்துடன் இணைந்து தொடங்கி வைத்தார். அப்போது திரு துர்கா சங்கர் மிஸ்ரா கூறுகையில்சிறு தொழில்முனைவு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுய உதவிக் குழுவினருக்கு உதவுவது மற்றும் வளர்ப்பது, அவர்களை நிதிரீதியாக மேம்படுத்தும் மற்றும் சுய உதவிக் குழுவினரின் குடும்பங்கள் தரமான வாழ்க்கை வாழ உதவும்’’ என்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758633

***



(Release ID: 1758677) Visitor Counter : 202


Read this release in: English , Urdu , Hindi , Punjabi