வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: தூய்மை கணக்கெடுப்பு 2022 தொடக்கம்
Posted On:
27 SEP 2021 3:48PM by PIB Chennai
நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் மேற்கொள்ளும் உலகின் மிகப் பெரிய நகர்ப்புற தூய்மை கணக்கெடுப்பு பணியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
‘மக்கள் முதலில்’ என்ற மையக் கருத்துடன் இந்த தூய்மை கணக்கெடுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்கள துப்புரவு பணியாளர்களின் ஒட்டு மொத்த நலனுக்கு, நகரங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பதிவு செய்யும் வகையில் தூய்மை கணக்கெடுப்பு 2022 திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ உணர்வுடன், நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு, மூத்த குடிமக்கள் மற்றும் இளைஞர்களின் குரலுக்கு முன்னுரிமை அளித்து, இந்தியாவின் நகர்ப்புறங்களில் தூய்மையை நிலைநாட்ட, அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய, மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, ‘‘தூய்மை இந்தியா திட்டம், நாட்டின் முக்கியமான, மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம். அனைத்து தரப்பினரின் பங்களிப்பால் இத்திட்டம் வெற்றி பெற்றது. மகாத்மா காந்தியின் தொலைநோக்கை நனவாக்குவதில், மாண்புமிகு பிரதமர் வினையூக்கியாக இருந்தார். தூய்மை இந்தியா திட்டத்தை முன்னின்று நடத்தி அதை மக்கள் இயக்கமாக மாற்றினார் என்றார்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் திரு கவுசல் கிஷோர் பேசுகையில், ‘‘ தூய்மை இந்தியா திட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தால் ஏற்பட்ட தூய்மை, நாடு கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவியது. தூய்மை பணியாளர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களாக செயல்பட்டனர். அவர்கள் நலனில் அரசும் அக்கறை செலுத்தியது. தூய்மை இந்தியா திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும், மக்கள் முழு மனதுடன் பங்கேற்று தங்கள் கடமையை உண்மையாக செய்ய வேண்டும்’’ என்றார்.
இன்று வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்களும், www.swachhbharaturban.gov.in என்ற இணையளத்தில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758560
*****************
(Release ID: 1758651)
Visitor Counter : 398