சுற்றுலா அமைச்சகம்
உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் சுற்றுலாவை மேம்படுத்த தகவல் தொழில் நுட்பம் துடிப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும்: மக்களவை தலைவர்
प्रविष्टि तिथि:
27 SEP 2021 5:26PM by PIB Chennai
2021-ம் ஆண்டு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சுற்றுலா" நிகழ்ச்சியில் மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா சிறப்புரை ஆற்றினார்.
மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மற்றும் சுற்றுலாத்துறைக்கான இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் யேசோ நாயக் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சர்வதேச வர்த்தக அமைப்பின் தலைமை செயலாளர் திரு சுராப் போலோலிகாஷ்விலியின் காணொலி செய்தி ஒளிபரப்பப்பட்டது.
சுற்றுலா செயலாளர் திரு அரவிந்த் சிங்; சுற்றுலா தலைமை இயக்குநர் திரு கமலா வர்தன ராவ்; தலைவர், யுஎன்ஈபி தலைவர் ஷாதுல் பகாய், சுற்றுலா அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பயண மற்றும் விருந்தோம்பல் துறையின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு பிர்லா, கொவிட்டுக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது என்றார். அவர் மேலும் கூறுகையில், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சிகள் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இந்தியா உருவெடுக்கும் என்பதை உறுதி செய்யும் என்றார்.
"கொவிட்-19-ஐ நாம் கூட்டாக வீழ்த்திய விதம், நமது கூட்டு சக்தி மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் நமது பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்" என்று திரு பிர்லா கூறினார். பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின் வளர்ச்சி இயந்திரங்களில் ஒன்று சுற்றுலா. எனவே, இந்தத் துறையின் வளர்ச்சிக்கு சிறப்பு கவனம் தேவை என்றார் அவர்.
நிதி 2.0-ஐ எனும் விருந்தோம்பல் துறையின் தேசிய ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை திரு ஓம் பிர்லா அறிமுகப்படுத்தினார். “இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள்: ஒரு பார்வை 2021”-ஐ அவர் வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட தரவுத்தளம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
மத்திய சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி உரையாற்றுகையில், "பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சில துறைகளில் சுற்றுலா துறையும் ஒன்றாகும், இதன் மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு சுற்றுலா செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது மிகவும் முக்கியம்,” என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758623
*****************
(रिलीज़ आईडी: 1758648)
आगंतुक पटल : 665