தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டார் மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்
Posted On:
27 SEP 2021 2:23PM by PIB Chennai
தொழிலாளர் வாரியத்தால் தயாரிக்கப்படும் காலாண்டு நிறுவன அடிப்படையிலான அகில இந்திய வேலைவாய்ப்பு ஆய்வின் ஒரு பகுதியாக, காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வின் (2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை) முதல் காலாண்டுக்கான அறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் இன்று வெளியிட்டார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் திரு ரமேஷ்வர் தெலி, செயலாளர் திரு சுனில் பர்த்வால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு முதன்மை ஆலோசகர் திரு டி.பி.எஸ். நெகி, தொழிலாளர் வாரியத்தின் தலைமை இயக்குநர் திரு ஐ.எஸ்.நெகி , அகில இந்திய ஆய்வுகளின் நிபுணர் குழு தலைவர் பேராசிரியர் எஸ் பி முகர்ஜி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முடிவுகளை அறிவித்த அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், தேர்வு செய்யப்பட்ட 9 துறைகளில் முதற்கட்ட ஆய்வின்படி மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வேலைவாய்ப்பு 3 கோடியே 8 லட்சம் என்றும், இது 6-வது பொருளாதார கணக்கெடுப்பு (2013-14) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 2 கோடியே 37 லட்சத்தை விட 29% அதிகம் என்றும் கூறினார்.
முழு அறிக்கையை இங்கே காணலாம்:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/sep/doc202192701.pdf
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=175852
*****************
(Release ID: 1758618)
Visitor Counter : 267