சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு தழுவிய ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்


"ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம், தடையற்ற ஆன்லைன் தளத்தை உருவாக்கி டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பிற்குள் செயல்படவைக்கும்"

Posted On: 27 SEP 2021 1:55PM by PIB Chennai

வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆகியோர் முன்னிலையில்பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், ‘‘மருத்துவ வசதிகளை பலப்படுத்த, கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் இந்த பிரச்சாரம், இந்தியாவை புதிய கட்டத்துக்குள் நுழைத்துள்ளது. ‘‘இந்திய மருத்துவமனைகளில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவரும் திட்டத்தை இன்று நாம் தொடங்கியுள்ளோம்’’ என பிரதமர் கூறினார். 

கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் ஆரோக்கிய சேது செயலி பெரிதும் உதவியது என பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா இன்று, இலவச தடுப்பூசி திட்டம் மூலம்சுமார் 90 கோடி தடுப்பூசி இலக்கை அடைவதில், கோவின் தளம் முக்கிய பங்காற்றியதை அவர் பாராட்டினார்.  சுகாதாரத்தில் தொழில்நுட்ப பயன்பாட்டை தொடருவது குறித்து பிரதமர் கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில் தொலைதூர மருத்துவ வசதி இதற்கு முன் இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ளது. இதுவரை சுமார் 125 கோடி பேர், இ-சஞ்சீவனி மூலம் தொலைதூர மருத்துவ ஆலோசனை பெற்றுள்ளனர். இந்த வசதி, நாட்டின் தொலைதூர பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கானோரை, வீட்டில் இருந்தபடியேநகரின் மிகப் பெரிய மருத்துவமனைகளின் மருத்துவர்களுடன் ஒவ்வொரு நாளும் இணைக்கிறது’’ என பிரதமர் கூறினார். 

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம், தற்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை இணைக்கும். இத்திட்டம் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை எளிதாக்குவதோடு மட்டும் அல்லாமல், எளிதாக வாழ்வதையும் அதிகரிக்கும். 

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடிமகனும், டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டையை பெற முடியும் மற்றும் அவர்களின் சுகாதார பதிவுகள், டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.

இந்நிகழ்ச்சி கீழ்கண்ட இணைப்பில் ஒளிபரப்பப்பட்டது.

https://www.youtube.com/watch?v=xvTq_N-Syas

*************


(Release ID: 1758615) Visitor Counter : 462