பாதுகாப்பு அமைச்சகம்

99-வது ராணுவ பொறியாளர் சேவைகள் தினம்

Posted On: 26 SEP 2021 11:41AM by PIB Chennai

ராணுவ பொறியாளர் சேவைகள் அமைப்பு (MES), முன்னணி கட்டுமான அமைப்பாகவும், இந்திய ராணுவ பொறியாளர்கள் படைப்பிரிவின் முக்கிய தூண்களில் ஒன்றாகவும் உள்ளது. இது பாதுகாப்பு படைகளுக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கும் பொறியியல் உதவியை வழங்குகிறது.

இந்தியாவில் மிகப் பெரிய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.30,000 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது.

எல்லைப் பகுதிகள் உட்பட, நாடு முழுவதும் பல கட்டுமான பணிகள், குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்கள், மருத்துவமனைகள், சாலைகள், ஓடுதளங்கள், கடல்சார் கட்டமைப்பு பணிகளை  எம்இஎஸ் மேற்கொள்கிறது. அதோடு நவீன ஆய்வு கூடங்கள், தொழிற்சாலைகள், பணிமனைகள், வெடிபொருள் சேமிப்பு கிடங்குகள், கப்பல் கட்டும் தளம், கப்பல் நிறுத்தும் இடங்கள் மற்றும் சிறப்பு கட்டுமானங்களை கட்டுகிறது.

இந்தாண்டு கொவிட் பாதிப்பு ஏற்பட்டபோதும், சிறப்பான முயற்சிகள் மூலம், ராணுவ தளங்களில் அத்தியாவசியப் பணிகளை தடையின்றி மேற்கொண்டது.

99-வது ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவன தினத்தை முன்னிட்டு, ராணுவ பொறியியல் பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பல் சிங், எம்இஎஸ் பிரிவு பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாதுகாப்பு படைகளுக்கு சிறந்த சேவைகள் ஆற்றுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758213



(Release ID: 1758341) Visitor Counter : 159


Read this release in: English , Urdu , Hindi , Bengali