கனரகத் தொழில்கள் அமைச்சகம்

7.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாக்க வாகன உற்பத்தி தொழில்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் உதவும்

Posted On: 24 SEP 2021 2:01PM by PIB Chennai

அடுத்த ஐந்து வருடங்களில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை கூடுதலாக உருவாக்க வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி தொழில்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் உதவும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம் ரூ 42,500 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ரூ 2.3 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் உற்பத்தி நடைபெறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி தொழில்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

முன்னேறிய வாகன தொழில்நுட்ப பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதில் உள்ள செலவு சார்ந்த குறைபாடுகளை களைவதை வாகன உற்பத்தி தொழில்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

முன்னேறிய வாகன தொழில்நுட்ப பொருட்களுக்கான புதிய முதலீடுகளை செய்ய இந்த ஊக்கத்தொகை முறை தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும். மேலும், சர்வதேச வாகன தொழிலில் இந்தியாவின் பங்களிப்பை இது அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757651

*****************



(Release ID: 1757778) Visitor Counter : 433