சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
காதுகேளாதோர் சர்வதேச வார நிகழ்ச்சி: டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமை தாங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
24 SEP 2021 2:32PM by PIB Chennai
புதுதில்லி, மத்திய சுகாதார கல்வி அலுவலகத்தில் நடந்த காதுகேளாதோர் சர்வதேச வார நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பாரதி பிரவின் பவார், நாட்டில் சுமார் 9 கோடி மக்கள் காது கேட்காத பிரச்சினைகளால் கஷ்டப்படுகின்றனர் என கவலை தெரிவித்தார். ‘‘நாம் தற்போது விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாடுவதால், நாம் கிராமங்களுக்கு சென்று, பல்வேறு உடல்நல பிரச்சினைகளை சந்திக்கும் குழந்தைகள் பரிசோதனை செய்து கொள்வதற்கு உதவ முடியுமா என பார்க்க வேண்டும்’’ என அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757657
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1757772)
வருகையாளர் எண்ணிக்கை : 277