சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆரோக்கிய மந்தன் 3.0 நிகழ்ச்சி: திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Posted On: 23 SEP 2021 6:30PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 3வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில், ஆரோக்கிய மந்தன் 3.0 நிகழ்ச்சியை, மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.   அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்ற தொலை நோக்குடன்சுகாதார ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், ராஞ்சியில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆரோக்கிய மந்தன் நிகழ்ச்சியின் கருப்பொருள் சேவை  மற்றும் சிறப்பு’. நான்கு நாட்கள் நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடைபெறும் இந்நிகழ்ச்சி ஆயுஷ்மான் பாரத் தினமாக தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, ‘‘ஆயுஸ்மான் பாரத் -  பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பை சீர்படுத்திவிட்டது. இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் 2.2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு சேவையாற்றியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், இத்திட்டத்தின் பயணம், பிரம்மாண்டமானது. நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் சுகாதார உரிமையை மேம்படுத்தியுள்ளது.’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை  சிறப்பாக செயல்படுத்திய  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆயுஷ்மான் உத்கிரிஸ்த புரஸ்கார்விருதை மத்திய அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், நாட்டின் சுகாதார முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியதில் ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் பங்கை வலியுறுத்தினார். இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் 2ம் நிலை மருத்துவமனைகளுக்கு புத்துயிர் அளிக்கும் திறன் கொண்டது என அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் 54 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு தரமான இலவச மருத்துவ வசதி கிடைப்பதை இத்திட்டம் நிறைவேற்றும் என நம்புகிறேன் என அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757341

 

*****************

 



(Release ID: 1757406) Visitor Counter : 197