எரிசக்தி அமைச்சகம்
ஆர் இ சி நிறுவனம், தெற்கு ஆசியாவின் ஜே-பால் நிறுவனம் இடையே தரவு பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
22 SEP 2021 3:38PM by PIB Chennai
எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் பொது உள்கட்டமைப்பு நிதி நிறுவனமாக இயங்கும் ஆர் இ சி நிறுவனமும், தெற்கு ஆசியாவின் அப்துல் லத்தீஃப் ஜமீல் வறுமை செயல் ஆய்வகமும் (ஜே-பால்) இணைந்து, நுகர்வோர் சேவை விநியோகத்தை மேம்படுத்தவும், நுகர்வோருக்கு நம்பகத்தன்மை வாய்ந்த மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், நாடு முழுவதும் 79 பொது மற்றும் தனியார் மின்சார விநியோக நிறுவனங்களின் தரவு சார்ந்த மதிப்பீட்டை ஆண்டுதோறும் மேற்கொள்ளவுள்ளன.
இந்தக் கூட்டு முயற்சியின் கீழ் மின்சார விநியோகத்தின் தரத்தில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து, நிலையை ஆய்வு செய்வதற்காக, மின்சார விநியோக நிறுவனங்களின் சேவை குறித்த தற்போதைய தரவுகளை மேம்படுத்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றும். சேவை விநியோகத்தின் பரிமாணங்கள், விநியோக காலம், குறைதீர்ப்பு அமைப்புமுறைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிறுவனங்களை மதிப்பிடும் ‘நுகர்வோர் சேவை குறியீட்டை' உருவாக்க இந்தத் தரவுகள் பயன்படும்.
மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் 2020- க்கு இணங்க, வீடுகளுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த மின்சார விநியோகத்தை உறுதி செய்வது மற்றும் மின்சார விநியோக நிறுவனங்களின் சேவைகளில் உள்ள இடைவெளியை அந்த நிறுவனங்கள் கண்டறிவதற்கு வெளிப்படைத் தன்மை வாய்ந்த மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான தடத்தை உருவாக்குவதே இந்தக் கூட்டணியின் முக்கிய நோக்கமாகும். மின்சார விநியோகத்தில் பொறுப்புடைமையை அதிகரிப்பதற்காக மின்சார விநியோக நிறுவனங்களின் வருடாந்திர தரவரிசை அறிக்கை மக்களிடமும் எடுத்துச்செல்லப்படும்.
இதற்கான உடன்படிக்கையில் ஆர் இ சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லட்சுமணன் மற்றும் தெற்கு ஆசியாவின் அப்துல் லத்தீஃப் ஜமீல் வறுமை செயல் ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் திருமிகு ஷோபினி முகர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756980
----
(Release ID: 1757013)
Visitor Counter : 200