வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கொவிட்-19 சவால்களுக்கு இடையிலும் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஏப்ரல் - ஆகஸ்ட் (2021-22) மாதங்களில் 22 சதவீதம் உயர்வு

Posted On: 21 SEP 2021 6:26PM by PIB Chennai

வேளாண் விளைபொருள்களின் ஏற்றுமதி வாய்ப்புகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் விதமாக, 2020-21ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021-22 (ஏப்ரல்-ஆகஸ்ட்)-இல் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களின் ஏற்றுமதி 21.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் வெளியிட்ட விரைவு மதிப்பீடுகளின் படி, அபேடாவின் தயாரிப்புகளின் ஒட்டு மொத்த ஏற்றுமதி ஏப்ரல் - ஆகஸ்ட் 2021-இல் 21.8 சதவிகித வளர்ச்சியைக் கண்டது.

அபேடா தயாரிப்புகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2020 ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் 6485 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021 ஏப்ரல் - ஆகஸ்ட்டில் 7902 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் ஏற்றுமதியில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது

நாட்டின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் சான்றாக இது கருதப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய உயர்வு, 2020-21 நிதியாண்டில் ஏற்பட்ட ஏற்றுமதியின் வளர்ச்சியின் தொடர்ச்சியாகும். சர்வதேச வர்த்தக அமைப்பின் மதிப்பீட்டின் படி, 2019-ஆம் ஆண்டில் மொத்தம் 37 பில்லியன் அமெரிக்க டாலர் விவசாய ஏற்றுமதியுடன், இந்தியா உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளது.

13.7 சதவிகிதம் நேர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்த அரிசி ஏற்றுமதி, 2020 ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில் 3359 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஏப்ரல்-ஆகஸ்ட் 2021-இல் 3820 அமெரிக்க டாலராக அதிகரித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756762

 



(Release ID: 1756842) Visitor Counter : 195


Read this release in: English , Urdu , Hindi , Telugu