பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2021 6:18PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு லாயிட் ஆஸ்டின் தொலைபேசி மூலம் இன்று மாலை தொடர்பு கொண்டார்.

ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர். ராணுவ ஒப்பந்தம் குறித்தும் ஆலோசனை செய்த இரு தலைவர்களும், ஒத்துழைப்பில் நெருங்கி பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர்.

பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து இந்திய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இருதரப்பும், மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒத்துக்கொண்டன.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1756521) வருகையாளர் எண்ணிக்கை : 335
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Marathi , Punjabi