பாதுகாப்பு அமைச்சகம்

“அமைதி இயக்கம் - 2021” எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயிற்சியின் ஆறாவது பதிப்பு ரஷ்யாவில் உள்ள ஒரென்பர்கில் தொடங்கியது

Posted On: 20 SEP 2021 5:17PM by PIB Chennai

ரஷ்யா நடத்தும் அமைதி இயக்கம் - 2021” எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பயிற்சியின் ஆறாவது பதிப்பு தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள ஒரென்பர்க் பகுதியில் இன்று தொடங்கியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கிடையே நெருக்கமான உறவுகளை உருவாக்குவதும், ராணுவ தலைமைகளின் திறமைகளை மேம்படுத்துவதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையை சேர்ந்த 200 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். அனைத்து படையினரின் அணிவகுப்பு, தொடக்க விழாவில் கண்கவர் வகையில் அமைந்திருந்தது.

ரஷ்ய பாதுகாப்பு படைகளின் மத்திய ராணுவ மாவட்ட தளபதி கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் பாவ்லோவிச் லாபின் படையினரிடையே உரையாற்றினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளின் படைகளும் பங்குபெறும் இந்த பயிற்சியின் அடிப்படையாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

அடுத்த சில நாட்களில், படையினர் பயிற்சிகளை இணைந்து மேற்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1756433

*****************(Release ID: 1756472) Visitor Counter : 73