குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இளைஞர்களுக்கு விளையாட்டுக்களை ஈர்ப்பான மற்றும் சாத்தியமான தொழில் வாய்ப்பாக மாற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

Posted On: 19 SEP 2021 6:20PM by PIB Chennai

இந்திய பாராலிம்பிக் வீரர்களின் திறமையையும் உறுதியையும் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, டோக்கியோ விளையாட்டு போட்டியில் அவர்கள் தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலமாக, இந்த சிக்கலான நேரத்திலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை கொண்டு வந்தனர் என கூறினார்.

டோக்கியோ பாராலிம்பிக் வீரர்களுக்கு குருகிராமில் இன்று நடந்த பாராட்டு விழாவில் உரையாற்றிய திரு.வெங்கையா நாயுடு கூறியதாவது:

 

பாராலிம்பிக் வீரர்களின் சாதனைகள் எளிதானதல்ல. பாராலிம்பிக் வீரர்களால் ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது. நீங்கள் பல  தடைகளை கடந்துள்ளீர்கள், விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காத சமூக அணுகுமுறைகளை வென்றுள்ளீர்கள். இது போன்ற சாதகமற்ற சூழ்நிலைகளிலும், உங்களின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்குவிப்பாக உள்ளன.

நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். விளையாட்டை  இளைஞர்களுக்கு ஈர்ப்பானதாகவும், சாத்தியமான தொழில் வாய்ப்பாகவும் மாற்ற வேண்டும்இது தொடர்பாக ஹரியானா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளூர் அளவில் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி, விளையாட்டில் திறமையுள்ளவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்.

விளையாட்டு, ஆரோக்கியமான போட்டியில் வெல்லும் ஆசையை தூண்டுவதோடு, ஒருவரை உடல் தகுதி,   ஒழுக்கம், குழு உணர்வுடன் இருக்கவும் வைக்கிறது

அதிகரிக்கும் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்கள், தனி நபரின் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கி, கொரோனா வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பை அதிகமாக்குகிறது. ஆகையால், ஆரோக்கியமான உணவு மற்றும் விளையாட்டுக்கள், நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்களை ஹரியானா அரசு மிகப் பெரிய அளவில் ஊக்குவிப்பது பாராட்டுக்குரியதுஇது மற்ற மாநிலங்களையும் ஊக்குவிக்கும்

இளைஞர்கள் தங்கள் உடல் தகுதியில் கவனம் செலுத்தி, முறையான சமைத்த பாரம்பரிய உணவுகளை உண்டு, இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும். குடியிருக்கும் மற்றும் வேலை செய்யும் இடங்களில் நல்ல சூரிய ஒளி, காற்றறோட்டம் இருப்பதும் முக்கியம்.

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு பேசினார்.

ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால், ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் திரு சந்தீப் சிங், விளையாட்டுத்துறை இயக்குனர் திரு பங்கன் நைன், ஹரியானாவைச் சேர்ந்த ஒலிக்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



(Release ID: 1756298) Visitor Counter : 178