சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு தின கொண்டாட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்

Posted On: 17 SEP 2021 5:07PM by PIB Chennai

இன்று நடைபெற்ற சர்வதேச நோயாளிகள் தின கொண்டாட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் முன்னிலையின் நிகழ்ச்சி நடைபெற்றது.

2021 செப்டம்பர் 11 முதல் 17 வரை இந்தியாவில் அனுசரிக்கப்பட்டு வந்த நோயாளிகள் பாதுகாப்பு வாரம் இத்துடன் நிறைவு பெற்றது. கர்ப்பகால மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புஎன்பது இந்த வருட நோயாளிகள் பாதுகாப்பு தினத்தின் மையக்கருவாகும்.

பொது சுகாதார மையங்களின் தரத்தை உறுதி செய்வதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், என் கியு ஏ எஸ் முன்முயற்சியின் ஆறு மாத கால சாதனைகள் மற்றும் கற்றல்கள், 2021 ஏப்ரல்-ஜூன் வரையிலான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்தின் முன்னேற்ற அறிக்கை, ஒருங்கிணைந்த ஆர் எம் என் சி ஏ எச்+என் மனநல ஆலோசனைக்கான கையேடு ஆகியவற்றை அமைச்சர் வெளியிட்டார்.

உலகம் மற்றும் இந்திய அளவில் குழந்தைப்பிறப்பு குறித்த புள்ளிவிவரங்கள் குறித்து பேசிய டாக்டர் பாரதி பிரவின் பவார், ரத்த சோகை, ரத்த கொதிப்பு, செப்சிஸ் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பேறுகால மரணங்களை தடுப்பதற்கான தேவை குறித்து பேசினார்.

மருத்துவ தொழிலில் தன்னுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், வசதிகள் சரிவர இல்லாத இடங்களில் குழந்தை பெற்றெடுப்பது ஆபத்தானது என்றார். ஒவ்வொரு பெண்ணும் கவுரவமான முறையில் குழந்தை பெறுவதற்கான உரிமை குறித்து வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755778

*****************


(Release ID: 1755923)