கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பாரதீப் துறைமுக கழகத்தில் 15 நாள் தூய்மைப் பணி
प्रविष्टि तिथि:
16 SEP 2021 4:11PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்துடன், 15 நாள் தூய்மை பணியையும் பாரதீப் துறைமுகக் கழகம் தொடங்கியது. பாரதீப் துறைமுக கழக துணைத் தலைவர் திரு ஏ.கே.போஸ், தூய்மை உறுதி மொழியை வாசித்தார். அனைத்து துறைத் தலைவர்களும், துணைத் தலைவர்களும் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நிர்வாக கட்டிடத்தை சுற்றிலும், பொறியில் துறையினர் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த 15 நாள் தூய்மை பணிக்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் இடையே தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், துறைமுக வளாகத்தில் பேனர்கள் வைப்பது, நகரின் முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொரோனா நெருக்கடி காரணமாக சமூக இடைவெளியுடன், இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755443
----
(रिलीज़ आईडी: 1755557)
आगंतुक पटल : 182