குடியரசுத் தலைவர் செயலகம்

செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொய்வில்லா முயற்சிகளின் காரணமாகவே இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாகி உள்ளது: குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்

Posted On: 15 SEP 2021 8:26PM by PIB Chennai

செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொய்வில்லா முயற்சிகளின் காரணமாகவே இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாகி உள்ளது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

செவிலியர்களுக்கு காணொலி மூலம் தேசிய ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அவர்களது தொடர் முயற்சிகளால் நமது மக்கள் தொகையில் குறிப்பிடத்தகுந்த அளவு மக்களுக்கு நம்மால் தடுப்பு மருந்து அளிக்க முடிந்தது,” என்றார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் பல செவிலியர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர் கொவிட் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போதே உயிரிழந்ததை நினைவு கூர்ந்தார். இந்த தியாகத்திற்காக நாடு என்றைக்கும் அவருக்கு கடன் பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

இத்தகைய சேவைகளையும் தியாகங்களையும் பணப் பலன்களால் சமன் செய்ய முடியாது என்றும், இருந்த போதிலும், அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் தலா ரூ 50 லட்சம் விரிவான காப்பீட்டைபிரதமரின் ஏழைகள் நல தொகுப்பு: கொவிட்-19- எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தைஅரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

செவிலியர்கள்: வழிகாட்டும் குரல்- எதிர்கால சுகாதார சேவைகளுக்கான லட்சியம்எனும் இந்த வருட சர்வதேச செவிலியர் தினத்திற்கான மையக்கருவை குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், உலகெங்கிலும் உள்ள சுகாதார சேவை அமைப்புகளில் செவிலியர்களின் மைய பங்களிப்புக்கு இது முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755184

 

-----(Release ID: 1755234) Visitor Counter : 71