சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தில்லி-மும்பை விரைவு நெடுஞ்சாலை பணியின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆய்வு

Posted On: 15 SEP 2021 3:12PM by PIB Chennai

தில்லி-மும்பை விரைவுசாலை பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி செப்டம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் ஆய்வு செய்கிறார்.

தில்லி-மும்பை இடையே 1,380 கி.மீ தூரத்துக்கு, ரூ.98,000 கோடி செலவில்  விரைவு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மிக நீண்ட விரைவு நெடுஞ்சாலையாக இருக்கும். இது தேசிய தலைநகர் தில்லி, நிதி தலைநகர் மும்பை இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இந்த விரைவுச் சாலை தில்லி-பரிதாபாத்-சோனா, ஜெவர் விமான நிலையம், ஜவஹர்லால் நேரு துறைமுகம் ஆகியவற்றை துணை சாலைகள் மூலம் இணைக்கும்.

மேலும், இந்த விரைவுச் சாலை தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை கடந்து சென்று, பொருளாதார மையங்களான ஜெய்ப்பூர், கிசான்கர், அஜ்மீர், கோட்டா, சித்தோர்கர், உதய்ப்பூர், போபால், உஜ்ஜெய்ன், இந்தூர், அகமதாபாத், வதோதரா, சூரத் ஆகியவை இடையே இணைப்பை மேம்படுத்தி லட்சக்கணக்கானோருக்கு பொருளாதார செழிப்பை கொண்டு வரும்.

பிரதமரின் புதிய இந்தியா தொலைநோக்கின் கீழ் உருவாக்கப்பட்ட தில்லி-மும்பை விரைவுச் சாலை, கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டதுமொத்தம் உள்ள 1,380 கி.மீ தூர நெடுஞ்சாலையில், 1,200 கி.மீ தூரம் வரை ஒப்பந்தங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755049

 

***

 



(Release ID: 1755194) Visitor Counter : 241