எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார் விருதை வென்றது தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனம்

Posted On: 15 SEP 2021 11:51AM by PIB Chennai

அலுவல் மொழி துறையின் மிக உயரிய விருதானராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்”, புதுதில்லியில் நேற்று நடைபெற்ற அலுவல் மொழி தின நிகழ்ச்சியில், எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் திரு நிஷித் பிரமாணிக், திரு அஜய் குமார் மிஸ்ரா ஆகியோர் வழங்கினார்கள். தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (பெரு நிறுவன விவகாரங்கள்) திரு சிவ சண்முகநாதன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனம்  தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த விருதை வென்று வருவதன் வாயிலாக இந்தியை அலுவல் மொழியாக அமல்படுத்துவதில் இந்த நிறுவனத்தின் சீரிய முயற்சி எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754981

*****

(Release ID: 1754981)


(Release ID: 1755051)