எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்தியப் பொதுத்துறை எஃகு நிறுவனங்களின் மூலதனச் செலவுகளை மத்திய எஃகு அமைச்சர் ஆய்வு செய்தார்

Posted On: 14 SEP 2021 3:05PM by PIB Chennai

எஃகு மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனச் செலவுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கான கூட்டம் ஒன்றுக்கு மத்திய எஃகு அமைச்சர் திரு. ராம் சந்திர பிரசாத் சிங் இன்று தலைமை வகித்தார்.

இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலஸ்தே, எஃகுத் துறைச் செயலாளர் திரு. பிரதீப் குமார், செயில், நேஷனல் மினெரல் டெவலப்மெண்ட் லிமிடெட், ராஷ்டிரிய இஸ்பட் நிகம் லிமிடெட், குத்ரெமுக் அயர்ன் ஓர் கம்பெனி லிமிடெட் மற்றும் மாங்கனீஸ் ஓர் (இந்தியா) லிமிடெட் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

செயல்பாட்டில் உள்ள திட்டங்களை விரிவாக ஆய்வு செய்த அமைச்சர், பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அதிகமான மற்றும் நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்க எஃகு உள்கட்டமைப்பை நிறுவுவதில் மூலதனச் செலவுகளுக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

மூலதனச் செலவுகளின் வேகத்தை அதிகப்படுத்துமாறும், திட்டங்களைக் குறித்த காலத்திற்குள் முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்தியப் பொதுத்துறை எஃகு நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754754

                                                                                                                                            -----

 

 

 



(Release ID: 1754846) Visitor Counter : 141