பாதுகாப்பு அமைச்சகம்

ஒவ்வொரு பாதுகாப்புக் கண்காட்சியை முன்னிட்டும் இந்திய-ஆப்பிரிக்க பாதுகாப்புப் பேச்சுவார்த்தைக் கூட்டம்

Posted On: 13 SEP 2021 3:51PM by PIB Chennai

இந்தியாவும் ஆப்பிரிக்காவும் நெருங்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுமுறையைப் பகிர்ந்து வருகின்றன. சாகர் (மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும்) மற்றும் வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்)  ஆகிய இரண்டு வழிகாட்டு கொள்கைகளின் அடிப்படையில் இந்திய-ஆப்பிரிக்க பாதுகாப்பு உறவு முறைகள் அமைந்துள்ளன.

இந்திய, ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் முதலாவது உச்சிமாநாடு 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பு கண்காட்சியை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன. லக்னோ பிரகடனம்' என்ற கூட்டு உடன்படிக்கை மாநாடு நிறைவடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற உள்ள பாதுகாப்புக் கண்காட்சியை முன்னிட்டு இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்புப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நடத்தும் இந்த கூட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தியா- ஆப்பிரிக்கா: ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒருங்கிணைப்பதற்கான உத்தியை பின்பற்றுதல்' என்பது இந்தக் கூட்டத்தின் முக்கிய கருப்பொருள் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754522

*****************



(Release ID: 1754561) Visitor Counter : 247