நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி சுரங்க திட்டம் பசுமையை அதிகரிக்கிறது
Posted On:
13 SEP 2021 3:54PM by PIB Chennai
நிலக்கரி சுரங்கம் தோண்டினால், நிலம் சீர்கெடும் என்ற கருத்து இருந்தாலும், நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் புதிய திட்டங்கள், நிலக்கரி சுரங்க பணிகளுடன், நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து அங்கு பசுமையை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
திறந்தவெளி நிலக்கரி சுரங்கச் செயல்பாட்டிற்குப் பிறகு மீண்டும் நிலத்தை நிரப்புவது மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதற்காக அடர்த்தியான தோட்டத்தை அமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஜெயந்த் திறந்தவெளி நிலக்கரி சுரங்க திட்டத்தில், நிலப்பகுதியை மீண்டும் சரிபடுத்தி, பசுமையை ஏற்படுத்தும் பணி ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையினால் மாசு அளவு கணிசமாக குறைய உதவியுள்ளது.
ஜெயந்த் நிலக்கரி சுரங்க திட்டத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியை நிலக்கரித்துறை அமைச்சக செயலாளர் ஆய்வு செய்தார். அப்போது, இங்கு நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்கு முன்பு இருந்த பசுமையை விட தற்போது பசுமை அதிகரித்துள்ளது செயற்கை கோள் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளன. இது மிகப் பெரிய நிலக்கரி திட்டத்தின், சிறந்த சாதனை.
ஜெயந்த் நிலக்கரி திட்ட செயல்பாடுகள் 3,200 ஹெக்டேர் நிலப் பகுதியில், மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு ஆண்டுக்கு 25 மில்லியன் டன்கள் அளவுக்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 1975-ம் ஆண்டு முதல் இங்கு நிலக்கரி சுரங்க செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இங்கு தோண்டி எடுக்கப்படும் நிலக்கரி உத்தரப் பிரதேசம் சக்திநகரில் அமைந்துள்ள என்டிபிசி நிறுவனத்தின் 2000 மெகாவாட் திறனுள்ள சிங்ராலி சூப்பர் அனல் மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754523
*****************
(Release ID: 1754559)
Visitor Counter : 256