சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

டோக்கியோ பாராலிமிபிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியினருக்கு சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பாராட்டு விழா

Posted On: 10 SEP 2021 3:28PM by PIB Chennai

டோக்கியோ 2020 பாராலிம்பிக் வெற்றியாளர்கள், இந்திய அணியின் இதர வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணைஅமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் வீரேந்திர குமார், இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களது சிறப்பான பங்களிப்பின் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்ததாக கூறினார். உலகக் தரமிக்க மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை உருவாக்கியதற்காக பயிற்சியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஒட்டுமொத்த இந்திய அணியினர், அவர்களது பாதுகாப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த திரு ராம்தாஸ் அத்வாலே, அனைவரது சிறப்பான பங்களிப்பின் காரணமாக சாதனை அளவிலான பதக்கங்களை நாடு வென்றதாக கூறினார்.

முதல் முறையாக, பாரலிம்பிக் போட்டியாளர்களுக்கு ரொக்க பரிசுகளை வழங்கும் முடிவை அமைச்சகம் எடுத்துள்ளது. தங்கம் வென்றவர்களுக்கு ரூ 10 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ 8 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ 5 லட்சமும் நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753843

 

----



(Release ID: 1753896) Visitor Counter : 194