உள்துறை அமைச்சகம்
கிளர்ச்சியில்லா மற்றும் வளமான வடகிழக்கிற்கான பிரதமரின் லட்சியத்தை அடையும் விதமாக நாகாலாந்து தேசிய சோஷியலிஸ்ட் குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சண்டை நிறுத்த ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
08 SEP 2021 7:41PM by PIB Chennai
கிளர்ச்சியில்லா மற்றும் வளமான வடகிழக்கிற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை அடையும் விதமாகவும், நாகா அமைதி செயல்பாட்டிற்கு குறிப்பிடத்தகுந்த ஊக்கமளிக்கும் விதமாகவும், நாகாலாந்து தேசிய சோஷியலிஸ்ட் குழு (கே) நிக்கி அணியுடன் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
2021 செப்டம்பர் 8 முதல் ஒரு வருடத்திற்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். குழுவின் 200 உறுப்பினர்கள் 83 ஆயுதங்களுடன் அமைதி செயல்பாட்டில் இணைந்தனர்.
என் எஸ் சி என் (என்கே), என் எஸ் சி என் (ஆர்) மற்றும் என் எஸ் சி என் (கே)-காங்கோ ஆகிய இதர நாகா குழுக்களுடன் சண்டை நிறுத்த ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753297
----
(रिलीज़ आईडी: 1753382)
आगंतुक पटल : 281