எரிசக்தி அமைச்சகம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் மின்துறையின் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கும் செயல் திட்ட கூட்டம்: மின்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்

Posted On: 08 SEP 2021 5:55PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில், மின்துறையின் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கும் செயல் திட்டம் குறித்து ஆலோசிக்கும் கூட்டம் மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் தலைமையில் நடந்தது

நீர்மின்சக்தி பொதுத்துறை நிறுவனங்கள், என்டிபிசி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம், சூரிய மின்சக்தி நிறுவனத்தின்  பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  மின் திட்டங்களை, மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள், தங்கள் நிதி நிலைக்கேற்ப ஏலம் எடுக்க  கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்

பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கும் அதிகாரம், மேல்நோக்கிய திருத்தத்துக்காக பொது நிறுவன துறையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை, நீர்மின்சக்தி திட்டங்களுடன் இணைக்க அனுமதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீர் மின்சக்தி கட்டணம் குறையும்.

நெகிழ்வுத் திட்டத்தின் கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி   திறனுக்கான பரிமாற்றக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட வேண்டும்.

மின்சார சட்டம் 2003-ன் 63வது பிரிவின் கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்கள் அமைக்க  தனியான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753238

 

-----



(Release ID: 1753342) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Punjabi