மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மென்பொருள் புதுமைக்கான சவாலில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 15 வரை நீட்டிப்பு
Posted On:
08 SEP 2021 4:58PM by PIB Chennai
ஆளுகை மற்றும் அரசு செயல்பாட்டில் ‘இலவச மற்றும் திறந்தவெளி ஆதார மென்பொருள்’ (Free and Open Source Software -FOSS) பயன்பாடு மற்றும் அதை பின்பற்றுதல் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான காணொலி வட்டமேசை ஆலோசனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 2021 ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்டது.
மைகவ்-வின் ஏழாவது ஆண்டை முன்னிட்டு #FOSS4Gov புதுமைகள் சவாலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியது. இலவச மற்றும் திறந்தவெளி ஆதார மென்பொருளை அரசு பயன்பாட்டில் அதிகரிப்பது மற்றும் இந்திய இலவச மற்றும் திறந்தவெளி ஆதார மென்பொருள் சூழலியலை கட்டமைப்பது 2021 ஜூலை 26 அன்று அறிவிக்கப்பட்ட இந்த சவாலின் நோக்கமாகும்.
இந்த சவாலின் வாயிலாக, இலவச மற்றும் திறந்தவெளி ஆதார மென்பொருள் சார்ந்த அல்லது புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துமாறு இந்தியாவில் உள்ள பல்வேறு புதுமையாளர்கள், புது நிறுவனங்கள், பணியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். சுகாதாரம், கல்வி, வேளாண்மை, நகர்ப்புற ஆளுகை ஆகியவற்றில் அரசு பயன்படுத்தும் வகையில் இந்த தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும். இந்த சவாலின் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் அவர்களது கண்டுபிடிப்புகளை அரசு மின் சந்தையில் (ஜிஈஎம்) விற்பதற்கான ஆதரவு வழங்கப்படும்.
இந்த சவாலில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பாளர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டுமென்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753198
----
(Release ID: 1753333)
Visitor Counter : 225