பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஜார்கண்ட்டில் ஊட்டச்சத்து மாத நடவடிக்கைகள்: பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார்

Posted On: 08 SEP 2021 2:32PM by PIB Chennai

ஜார்கண்ட் மாநிலத்தின் குன்ட்டி மாவட்டத்தில், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் ஊட்டச்சத்து மாத நடவடிக்கைகளை, இத்துறையின் அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார்.

பழங்குடியின பெண்களின் ஆரோக்கியம், ஊட்டசத்து மாதத்தின் முக்கியமான அம்சம். பழங்குடியின பெண்களுக்கு ஊட்டச்சத்தின் மீது கவனத்தை கொண்டு வர, மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்ட பயனாளிகளை சந்தித்து, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின் பயன்களை எடுத்துரைத்தார்.

ஊட்டசத்து ஆலோசனை முகாம் மற்றும் ஊட்டசத்து கருத்தரங்கம் ஆகியவை பீகாரின் நவடா மாவட்டத்தில் ஜீலாரா என்ற பழங்குடியின கிராமத்தில் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சந்தால் என்ற இடத்தில் நடத்தப்பட்ட முகாமில் பொதுமக்கள் 200 பேர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முன்கூட்டியே எடைபார்க்கப்பட்டு, ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அப்பகுதியில் கிடைக்கும் ஊட்டச்சத்து தானியங்கள் குறித்தும், முகாமில் தெரிவிக்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு, ஊட்டச்சத்து, சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டன

ஊட்டசத்து திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நான்காவது ஊட்டசத்து மாதம் செப்டம்பரில் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அளவில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753115

 

-----



(Release ID: 1753328) Visitor Counter : 162