குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
திறன் மேம்பாட்டு பயிற்சி, சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டி ஆதரவு தேவை: செயலாளர் வலியுறுத்தல்
Posted On:
08 SEP 2021 11:21AM by PIB Chennai
திறன்மேம்பாட்டு பயிற்சி, சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டி ஆதரவு தேவை என இத்துறை செயலாளர் திரு பி.பி.ஜெயின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா அமைப்பின்(இப்சா) 6வது மாநாட்டை காணொலி மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு பி பி ஸ்வெய்ன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பலம், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இப்சா அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது என கூறினார். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு சந்தையை உருவாக்குவதிலும், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், சிறந்த முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் ஆகியவை மூலம் ஆதரவு அளித்தல் போன்றவற்றில் இப்சா அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வர்த்தகத்தை மேம்படுத்துதல், வரத்தக தடைகளை புரிந்து கொள்ளுதல், மூன்று நாடுகள் இடையேயான கூட்டு முயற்சி மூலம், முதலீடுகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவற்றுக்காக இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என திரு பி.பி.ஸ்வெய்ன் கூறினார்.
மூன்று வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த, பெரிய ஜனநாயக மற்றும் முக்கிய பொருளாதார நாடுகளான இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவை ஒன்றிணைப்பதில், இப்சா தனித்துவமான அமைப்பாக உள்ளது.
இப்சா அமைப்பின் 6வது காணொலி மாநாட்டில், 4 தொழில்நுட்ப அமர்வுகள் 2 நாட்கள் நடக்கின்றன. இதில் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், மூத்த அதிகாரிகள், பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கின்றனர்.
தேசிய தொழில் முனைவோர் அமைப்பில், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை செயல்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம், நிலையான வளர்ச்சி , எதிர்காலத்தில் கொரோனா போன்ற நெருக்கடிகளை சமாளிக்க இப்சா அமைப்பின் தயார் நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
----
(Release ID: 1753140)
Visitor Counter : 253