ஆயுஷ்
ஆயுர்வேத கல்வி இருக்கையை அமைக்க அகில இந்திய ஆயுர்வேத மையம் மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
07 SEP 2021 4:04PM by PIB Chennai
ஆயுர்வேத கல்வி இருக்கையை அமைக்க, அகில இந்திய ஆயுர்வேத மையம் மற்றும் ஆஸ்திரேலியாவின் என்ஐசிஎம் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் காணொலி காட்சி மூலம் கையெழுத்தானது.
இதில் அகில இந்திய ஆயுர்வே மையத்தின் இயக்குனர் தனுஜா நெசாரி, மேற்கு சிட்னி பல்கலைக்கழக தலைவர் பேராசிரியர் பார்னே க்ளோவர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் அமையும் புதிய கல்வி இருக்கை, கல்வி மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்தல், பாடத்திட்டங்களை உருவாக்குதல், கல்வி வழிகாட்டுதல்களை உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளும். ஆயுர்வேதம் குறித்த பயிலரங்கம், கருத்தரங்கம், மாநாடு ஆகியவற்றையும் இந்த இருக்கை நடத்தும்.
இந்த ஆயுர்வேத கல்வி இருக்கை மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் என்ஐசிஎம் சுகாதார ஆராய்ச்சி மையத்தில், 3 ஆண்டு காலத்துக்கு செயல்படும். இந்த இருக்கைக்கு ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் கூட்டாக நிதியளிக்கும். இது 2022-ம் ஆண்டில் தொடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752828
-----
(रिलीज़ आईडी: 1752986)
आगंतुक पटल : 279