எரிசக்தி அமைச்சகம்

விடுதலையின் அம்ருத் மஹோத்சவம்: அசாம் ரைஃபிள்ஸ் குழுவினரின் மிதிவண்டி பேரணியில் பங்கேற்றது தேசிய அனல் மின் கழகம்

Posted On: 07 SEP 2021 3:04PM by PIB Chennai

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கிய ஷில்லாங் முதல் புதுதில்லி வரையிலான 3000 கிலோ மீட்டர் “சுதந்திர மிதிவண்டி பேரணியில்” இந்திய ராணுவத்தின் பழமைவாய்ந்த துணை ராணுவப் படையான அசாம் ரைஃபிள்ஸ் உடன் தேசிய அனல் மின் கழகம் இன்று பங்கேற்றது. 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி, அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாறு ஆகியவற்றைக் குறிப்பதுடன், ஃபிட் இந்தியா இயக்கத்தையும் இந்தப் பேரணி ஊக்குவிக்கும்.

பாங்கெய்காவோனில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சுப்ரதா மண்டல் தலைமையில் அனல் மின் நிலையத்தின் பல்வேறு துறைகளில் பணி புரியும் 20க்கும் மேற்பட்டோர் அசாம் ரைஃபிள்ஸ் குழுவோடு சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் பேரணியில் கலந்து கொண்டனர். தேசிய அனல் மின் கழகத்தின் கொடி மற்றும் “விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம்” என்ற பதாகைகளை ஏந்தி காஷிகோத்ரா முதல் காரேகாவோன் வரை அவர்கள் பயணம் செய்தனர்.

கோக்ராஜ்ஹர் மற்றும் பாங்கெய்காவோன் இடையே திரு சுப்ரதா மண்டல், நிறுவனத்தின் பொது மேலாளர் திரு உமேஷ் சிங், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தளபதி திரு ஹெச்.கே. பிரம்மா மற்றும் இதர அதிகாரிகள், கர்னல் அஜித் கத்ரி தலைமையிலான 40 வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752811

-----



(Release ID: 1752912) Visitor Counter : 238