நிதி அமைச்சகம்
பெங்களூரில் வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்துக்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்
Posted On:
05 SEP 2021 12:07PM by PIB Chennai
பெங்களூரு இன்பேன்ட்ரி சாலையில், வருமானவரித்துறை அலுவலக கட்டிடத்துக்கு மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அடிக்கல் நாட்டினார். அந்த இடத்தில் அதற்கான அறிவிப்பையும் அவர் திறந்து வைத்தார். பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி திரு பி.சி.மோகன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், மத்திய அரசின் வருவாய்த்துறை செயலாளர் திரு தரூண் பஜாஜ், மத்திய நேரடி வரி வாரியத் தலைவர் ஜே.பி. மொகாபத்ரா, மறைமுக வரி வாரியம் மற்றும் சுங்கத்துறை தலைவர் திரு எம்.அஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிதாக அமையவுள்ள வருமானவரித்துறை கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 18 தளங்கள், அடித்தள கார் பார்க்கிங் வசதியுடன் அமையவுள்ளது.
இந்த கட்டிடத்தில் மின் உற்பத்திக்கு, சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்படவுள்ளன. மத்திய பொதுப்பணித்துறை கட்டும் இந்த கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு, காற்று சுத்திகரிப்பு உட்பட பல வசதிகள் அமைக்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752266
-----
(Release ID: 1752379)
Visitor Counter : 253