அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாடு முழுவதுமுள்ள மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் இன்ஸ்பயர் விருதுகள்-மனாக்கின் தேசிய அளவிலான கண்காட்சி தொடங்கியது
Posted On:
04 SEP 2021 5:13PM by PIB Chennai
இன்று தொடங்கிய இன்ஸ்பயர் விருதுகள்-மனாக்கின் எட்டாவது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்ட போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 581 மாணவர்களின் புதுமையான சிந்தனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டிய இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் ரேணு சுவரூப், இளம் கண்டுபிடிப்பாளர்களிடம் படைப்புத்திறனை ஊக்குவிப்பதற்கான துடிப்பு மிகுந்த சூழலியலை நாடு உருவாக்கியுள்ளது என்றார்.
2021 செப்டம்பர் 8 அன்று காணொலி மூலம் நடைபெறவுள்ள இன்ஸ்பயர் விருதுகள்-மனாக்கின் எட்டாவது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்ட போட்டியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் & புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொள்கிறார்.
3,92,486 சிந்தனைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட சிறந்த புதுமையான சிந்தனைகளை காட்சிப்படுத்தியுள்ள இந்த கண்காட்சியை 2021 செப்டம்பர் 4 முதல் 8 வரை https://nlepc.nif.org.in/community/#/login எனும் இணைப்பில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752021
*****************
(Release ID: 1752129)
Visitor Counter : 347