தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தொகுதிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி தேர்தல்

Posted On: 04 SEP 2021 1:53PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் பபனிபுர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் ஏற்கனவே நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட சம்செர்கஞ், ஜாங்கிபூர் (மேற்கு வங்கம்) மற்றும் பிபலி (ஒடிசா) தொகுதிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறும். முடிவுகள், அக்டோபர் 3 அன்று வெளியிடப்படும்.

ஒத்திவைக்கப்பட்ட 3  சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்கள் (மேற்கு வங்கத்தில் 2, ஒடிசாவில் 1) நடத்தப்பட வேண்டியிருப்பதுடன், நாடாளுமன்ற தொகுதிகளில் 3 இடங்களும், பல்வேறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களில் 32 இடங்களும் காலியாக உள்ளன.

பல்வேறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிப்பதற்காக செப்டம்பர் 1-ஆம் தேதி, சுகாதாரம் மற்றும் உள்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் காவல் துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் ஆணையம் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

ஆந்திரப் பிரதேசம், அசாம், பிகார், ஹரியானா, இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச்செயலாளர் களும்தாதர் மற்றும் நாகர் ஹவேலிடாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஆலோசகர்களும், வெள்ள நிலவரங்கள், பண்டிகைகள் மற்றும் பெருந்தொற்று முதலியவற்றை சுட்டிக்காட்டி பண்டிகை காலத்திற்குப் பிறகு இடைத்தேர்தல்களை நடத்த யோசனை தெரிவித்தனர்.

தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த மேற்கு வங்கத்தின் சம்செர்கஞ், ஜாங்கிபூர் மற்றும் ஒடிசாவின் பிபலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல்களை நடத்தவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த மூன்று தொகுதிகளில் வேட்பாளர்கள் 29.04.2021 முதல் 03.05.2021 வரை ஏற்கனவே பிரச்சாரம் மேற்கொண்டதால் 20.09.2021 முதல் மட்டுமே இந்தத் தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி அளிக்க அணையம் முடிவு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751968

*****************(Release ID: 1752009) Visitor Counter : 232