நிதி அமைச்சகம்

11-வது இங்கிலாந்து-இந்திய பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை

Posted On: 02 SEP 2021 7:28PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் இங்கிலாந்து கரூவூல வேந்தர் திரு ரிஷி சுனாக் ஆகியோரின் காணொலி தலைமையின் கீழ் 11-வது இங்கிலாந்து-இந்திய பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், செபி தலைவர், சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையத்தின் தலைவர், பொருளாதார விவகாரங்கள் செயலாளர் மற்றும் நிதி, வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகங்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் பிரதிநிதிகள் இந்திய குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து வங்கியின் ஆளுநர், நிதி நடத்தை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பொருளாதார செயலாளர் மற்றும் இதர அலுவலர்கள் இங்கிலாந்து குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஜி20 மற்றும் காப்26 உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஃபின் டெக் மற்றும் கிஃப்ட் சிட்டி, வருடாந்திர இந்திய-இங்கிலாந்து நிதி சந்தை பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மீது சிறப்பு கவனம் செலுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் மற்றும் இங்கிலாந்து கரூவூல வேந்தர் ஆகியோருக்கிடையேயான கூட்டறிக்கை மற்றும் பருவநிலை நிதி தலைமைத்துவ நடவடிக்கையில் இந்திய கூட்டு குறித்த கூட்டறிக்கையோடு 11-வது இங்கிலாந்து-இந்திய பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தை நிறைவுற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751510

*****************(Release ID: 1751544) Visitor Counter : 98