பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தரகாண்ட் வெள்ளம்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் எல்லை சாலைகள் அமைப்பு தீவிரம்

Posted On: 02 SEP 2021 10:29AM by PIB Chennai

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோராகர் மாவட்டத்திலுள்ள தார்சுலா என்ற தொலை தூர நகரம், மிக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குடன் முன்னெப்போதும் இல்லாத மழை பொழிவை சந்தித்தது.

பிதோராகர்- தாவாகட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோபாட் பகுதியில் சுமார் 500 மீட்டர் சாலை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய வழித்தடத்தில் சாலை துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, எல்லை சாலைகள் அமைப்பு, ஹிராக் பிரிவைச் சேர்ந்த சிறப்புக் குழுவினரை உடனடி நிவாரணம் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளில் ஈடுபட நியமித்துள்ளது. துரிதமாக சாலையை மீண்டும் இணைக்கும் பணியில் 80 வீரர்கள் அடங்கிய பணிக்குழு, மீட்பு உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரு புஷ்கர் சிங் தமி, தார்சுலாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை  செப்டம்பர் 1-ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தார். பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதை தளங்களை எல்லை சாலைகள் அமைப்பு வீரர்கள் சீரமைத்துள்ளனர். அருகில் உள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் அவர்கள் விநியோகித்தனர். சவாலான சூழல்களுக்கு இடையேயும் விரைவில் சாலையை சீரமைக்கும் பணியில் வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751305

****

 

(Release ID: 1751305)


(Release ID: 1751366) Visitor Counter : 310