சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 229-வது நாள்: 66 கோடிக்கும் அதிகமானோருக்கு இது வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 01 SEP 2021 7:56PM by PIB Chennai

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 66 கோடிக்கும் அதிகமானோருக்கு (66,17,38,647) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தியுள்ளது.

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 69 லட்சத்திற்கும் அதிகமான (69,42,335)) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்கான இறுதி அறிக்கைகள் இன்று பின்னிரவில் நிறைவு செய்யப்படும்.

இதுவரை ஒட்டுமொத்தமாக சுகாதார பணியாளர்களில் 1,03,59,284 பேருக்கு முதல் டோசும், 84,12,633 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 1,83,25,480 பேருக்கு முதல் டோசும், 1,33,12,134 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 25,89,65,198 பேருக்கு முதல் டோசும், 2,97,99,597 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில்  13,31,15,304 பேருக்கு முதல் டோசும், 5,58,15,121 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 8,79,81,364 பேருக்கு முதல் டோசும், 4,56,52,532 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 50,87,46,630 முதல் டோசுகளும் 15,29,92,017 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் (2021 செப்டம்பர் 1), சுகாதார பணியாளர்களில் 433 பேருக்கு முதல் டோசும், 16,548 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 1,077 பேருக்கு முதல் டோசும், 67,729 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 35,94,907 பேருக்கு முதல் டோசும், 10,39,972 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் 8,70,219 பேருக்கு முதல் டோசும், 6,34,347 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3,91,310 பேருக்கு முதல் டோசும், 3,25,793 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 48,57,946 முதல் டோசுகளும் 20,84,389 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன

கொவிட்-19 இடமிருந்து மக்களை காப்பாற்றக்கூடிய கருவியாக தடுப்புமருந்து வழங்கல் இருப்பதால், உயர்மட்ட அளவில் அது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751205

*******

 

(Release ID: 1751205)


(रिलीज़ आईडी: 1751309) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi