மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஊரக பொருளாதார வளர்ச்சிக்கு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
01 SEP 2021 5:22PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, ஊரக பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் திரு அதுல் சதுர்வேதி, ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு என்.என். சின்ஹா ஆகியோர் கிரிஷி பவனில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்சோத்தம் ரூபெலா, ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர்கள் திரு ஃபகன் சிங் குலாஸ்தே மற்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கால்நடை பராமரிப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, பால்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் போன்ற முதன்மையான திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை வழங்குகிறது.
சமீபத்தில், சிறப்பு கால்நடை பிரிவு நிதியுதவி திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த தற்போதுள்ள திட்டங்களின் அம்சங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாற்றியமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதேபோல், வாழ்வாதார நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடும் திட்டங்கள் மூலம் ஊரக மேம்பாட்டுக்கு ஊரக மேம்பாட்டுத்துறையும் பணியாற்றி வருகிறது.
ஆகையால், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை முயற்சிகளை ஒருங்கிணைத்து, கால்நடைத்துறையில் விவசாயிகளின் வருவாயை இரு மடங்கு உயர்த்துவதே பொதுவான நோக்கம்.
இரு துறைகள் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, சுய உதவிக் குழுவினரின் சேவையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கால்நடை உற்பத்தி விரிவாக்கத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட் (Accredited Agent for Health and Extension of Livestock Production -- “A-HELP” ) என்ற புதிய முறை மூலம் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கால்நடை வள நபர்கள் மற்றும் முதன்மை சேவை வழங்குனர்களாக செயல்படவுள்ளனர். இந்த முறை, நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது.
தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ஆகியவை விவசாய வாழ்வாதார துறைக்கு உதவி வருகிறது.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், கால்நடைத் துறையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே இப்போதைய தேவை என மத்திய அமைச்சர் திரு பர்சோத்தம் ரூபாலா எடுத்துரைத்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததற்காக, இரு துறைகளையும், மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் பாராட்டினார். தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி, ஊரக செழிப்பை அதிகரிக்கும் இலக்கை நோக்கி இரு துறைகளும் இணைந்து செயல்பட அவர் வாழ்த்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751108
(Release ID: 1751231)
Visitor Counter : 356